கோட்டாபயவின் நிறைவேற்று அதிகாரத்தை உடனடியாக நாடாளுமன்றுக்கு மாற்ற முயற்சிக்கும் ராஜபக்ச!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்வின் நிறைவேற்று அதிகாரங்களை அமைச்சரவைக்கு மாற்றியமைத்து உடனடியாக புதிய ஜனாதிபதியை நாடாளுமன்றம் தெரிவுசெய்யும் அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச கையளித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை மீளமைப்பதற்காக 21 வது திருத்தத்தை, தாம், தனி ஆள் சட்டமூலமாக நாடாளுமன்ற செயலாளரிடம்; கையளித்ததை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்
இதன்படி, ஜனாதிபதி பதவிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரங்கள் அமைச்சரவை உறுப்பினர்களுக்கு மாற்றப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை கண்காணிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு வழங்க வேண்டும் என்று அவர் முன்மொழிந்துள்ளார்.
பெரும்பான்மை பலமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களால்,ஜனாதிபதியும் பிரதமர்களும் தெரிவுசெய்யப்படுவார்கள்.
அத்துடன் நாடாளுமன்;றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களையும் உள்ளடக்கிய இடைக்கால அமைச்சரவையை நியமிக்க இந்த யோசனையில் முன்மொழியப்பட்டுள்ளது. முன்மொழிந்துள்ளார்,
இடைக்கால அரசாங்கம் சபையின் பதவிக்காலம் முடியும் வரை அல்லது அது கலைக்கப்படும் வரை தொடரும் என்றும் விஜயதாச தமது யோசனையில் குறிப்பிட்டுள்ளார்.