பொது தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகும் விக்னேஸ்வரன் - மணிவண்ணன் கூட்டணி
சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சீ.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சி
அத்துடன், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியோடோ, இலங்கை தமிழரசுக் கட்சியோடோ இணைந்து போட்டியிடப் போவதில்லை எனவும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இதனிடையே தமிழ் மக்கள் கூட்டணியுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் முக்கியஸ்தரும் யாழ்.மாநகரசபையின் முன்னாள் முதல்வருமான வி.மணிவண்ணன் இணைந்துள்ளார்.
வி.மணிவண்ணனை முதன்மை வேட்பாளராக உள்ளடக்கி தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் பட்டியல் யாழ்ப்பாணத்தில் தயராவதாக கூறப்படுகின்றது.
you may like this
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri