எனது மனைவியின் வெளிநாட்டுப் பயணம் அவரது தொழில் சம்பந்தப்பட்டது: நாமல் ராஜபக்ச
தனது மனைவியின் பயணங்கள் முற்றிலும் அவரது பணிகள் மற்றும் சுற்றுலாத்துறையை அடிப்படையாக கொண்டவை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
My wife’s work has always revolved around travel & tourism. It has nothing to do with my political life! She is a career woman & will continue to be so! Her travel is purely related to her work don’t think that constitutes as #BreakingNews.https://t.co/xOOMUqceRP
— Namal Rajapaksa (@RajapaksaNamal) July 8, 2022
அதற்கும் தனது அரசியல் வாழ்க்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். எனது மனைவியின் தொழில் சம்பந்தப்பட்டது. அவர் தொடர்ந்தும் அதில் ஈடுபடுவார். அவரது வெளிநாட்டுப் பயணம் முற்றிலும் அவருடய தொழிலுடன் சம்பந்தப்பட்டது.
அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்டது என்று நினைக்க வேண்டாம் என நாமல் ராஜபக்ச அதில் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச தனது குழந்தையுடன் சிங்கப்பூர் ஊடாக பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றதாக செய்தி வெளியாகியது.
இது தொடர்பாகவே நாமல் ராஜபக்ச தனது டுவிட்டரில் இந்த பதிவை இட்டுள்ளார்.