அரபு நாட்டிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்ற மனைவியை காணவில்லை: யாழில் கணவன் முறைப்பாடு!

Jaffna Kilinochchi Sri Lanka
By Theepan Mar 08, 2023 06:01 AM GMT
Report

ஐக்கிய அரபு நாட்டிற்கு வீட்டுபணிப்பெண்ணாக சென்ற பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் யாழ்.மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு பணியகத்தில் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் (07.03.2023) யாழ்.மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு பணியகத்தில் முறைப்பாடு பதிவு செய்வதற்காக வந்த போதே கணவனும் இரு பிள்ளைகளும் ஊடகத்திற்கு இந்த தகவலை வழங்கியுள்ளனர்.

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 39 வயதுடைய கோமதி பஞ்சலிங்கம் என்பவரே அரபு நாட்டுக்கு பணிக்காக சென்றிருந்த நிலையில், காணாமல் போயுள்ளார்.

அரபு நாட்டிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்ற மனைவியை காணவில்லை: யாழில் கணவன் முறைப்பாடு! | Wife Is Missing

சம்பளம் அனுப்பவில்லை

இது தொடர்பில் அவரது கணவர் கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வீட்டுப்பணிக்காக மனைவி அரபு நாட்டிற்குச் சென்றிருந்தார். அவ்வாறான நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக அங்கிருந்து பணம் அனுப்பியிருந்தார். எனினும் இந்த மாதம் சம்பளம் அனுப்பவில்லை.

இதனையடுத்து, மனைவியுடன் தொடர்புகொள்ள முயன்ற போது, தொடர்பு கிடைக்கவில்லை எனவும், அதனையடுத்து அவர் பணிக்காகச் சென்றிருந்த வீட்டு உரிமையாளருக்குத் தொடர்பை ஏற்படுத்தி விசாரித்தபோது, அவர் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அவர்களின் பதிலில் முரண்பாட்டுத்தன்மை இருக்கின்றது.

ஏனெனில் வீட்டு உரிமையாளரான பெண், எனது மனைவி, வீட்டின் முன்பக்க வாயிலாலேயே தப்பிச் சென்றார் எனத் தெரிவித்திருந்த நிலையில், அவரது கணவன் வீட்டு மாடியிலிருந்த ஏணியால் தப்பிச் சென்றுள்ளார் எனத் தெரிவித்துள்ளார். அவர்களின் முரண்பாடான பதிலின் மீது எமக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால், காணாமல் போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் மனைவி தொலைப்பேசியில் உரையாடும் போது, பணிக்குச் சென்றுள்ள வீட்டு உரிமையாளர்களுடன் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறித்த பெண்ணின் தொலைப் பேசி மற்றும் கடவுச்சீட்டு என்பவற்றைப் பறித்து வைத்துள்ளதாகவும் அதனைத் தருமாறு கேட்டு முரண்பட்டதாகவும் தெரிவித்தார்.

அரபு நாட்டிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்ற மனைவியை காணவில்லை: யாழில் கணவன் முறைப்பாடு! | Wife Is Missing

இருக்கின்றாரா... இல்லையா...

இதனையடுத்து, 4ஆம் திகதி முதல் மனைவியுடன் எந்தத் தொடர்பும் ஏற்படுத்த முடியவில்லை. அதனையடுத்து வீட்டு உரிமையாளர்களுடன் அரபு மொழியில் உரையாடிய போதே, மனைவி காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

எனது மனைவி தற்போது உயிருடன் இருக்கின்றாரா அல்லது இல்லையா என்பது தொடர்பில் எதுவும் தெரியவில்லை. வீட்டு உரிமையாளரால் தாக்கப்பட்டு இறந்து விட்டாரா என்பது கூடத் தெரியவில்லை.

ஆகவே அரசியல் தலைவர்களும், நாட்டின் அதிபரும் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு எனது மனைவியை, மீட்டுத்தர வேண்டும். அவருக்கு என்ன நடந்தது, உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்பது தொடர்பில் எமக்கு அறியத்தர வேண்டும்.

மனைவி காணாமல் போயுள்ளமை தொடர்பில் யாழ்.மாவட்ட செயலகத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்யச் சென்றிருந்த போது, வீட்டுப் பணிக்காகச் செல்வோர் 2 வருடங்களைக் கடந்திருந்தால் மட்டுமே நாம் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும் அவ்வாறு இல்லாத பட்சத்தில் பணிக்காக அனுப்பிய முகவர்களே அதற்குப் பொறுப்பு எனத் தெரிவித்துள்ளனர்.

அரபு நாட்டிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்ற மனைவியை காணவில்லை: யாழில் கணவன் முறைப்பாடு! | Wife Is Missing

இவ்வாறான நிலையில் எமது வறுமை காரணமாக மனைவி வீட்டுப் பணிக்காக வெளிநாடு சென்றிருந்தார். நானும் இங்குக் கூலித் தொழில் தான் செய்து வருகின்றேன். தற்போது மனைவி காணாமல் போயுள்ளார். தற்போது நானும் எனது 2 பிள்ளைகளும் மனைவியைக் காணாது தவித்து நிற்கின்றோம்.

எனவே அரச நிறுவனங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் நாட்டின் தலைவர் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு எனது மனைவியை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.  

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US