மனைவியின் கழுத்தை கத்தியால் வெட்டிய கணவன்! திருகோணமலையில் சம்பவம்
திருகோணமலை - செல்வநாயகபுரம் பகுதியில் கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
செல்வநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த வீ.திவ்யா (30 வயது) என்ற பெண்ணே இவ்வாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குடும்பத் தகராறு
குடும்பத் தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுபோதையில் வந்த கணவன், மனைவியான குறித்த பெண்ணின் கழுத்தை கத்தியால் வெட்டியுள்ளார்.
இதனையடுத்து காயமடைந்த மனைவி அயலவர்களால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
கணவன் பொலிஸாரிடம் ஒப்படைப்பு
இதேவேளை குறித்த பெண்ணின் கணவனை அயலவர்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
துபாயில் ICU-வில் தாய்: இந்தியா வர ரூ 50 லட்சம் கேட்கும் ஏர் ஆம்புலன்ஸ்: தவிக்கும் தமிழர் News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri