தகராறு செய்த கணவனை கத்தியால் வெட்டிய மனைவி
மாத்தறை, ஊருபொக்க பிரதேசத்தில் தனது கணவனை கத்தியால் வெட்டி படுகாயப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மனைவி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதிகளவில் மது அருந்திவிட்டு வீடுவந்து தகராறு செய்த கணவனை மனைவி இவ்வாறு வெட்டி காயப்படுத்தியுளளார்.
நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட பெண் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மொரகவக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மனைவி கைது
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் ஊருபொக்க, கட்டுவணை பகுதியை சேர்ந்த 45 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.

குறித்த பெண் கணவனை கத்தியால் தாக்கிவிட்டு, அந்த கத்தியையும் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். இதன்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த நபர் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் பதற்ற நிலை - பொலிஸ் அதிகாரி தொடர்பில் பெண்ணின் அதிர்ச்சி குற்றச்சாட்டு