தென்னிலங்கையில் கணவனை கொலை செய்த மனைவி - உதவி புரிந்த சகோதரன்
தென்னிலங்கையில் கணவனுக்கு விசம் வைத்து கொலை செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 20ஆம் திகதி பெலியத்த கொஸ்கஹகொட பிரதேசத்தில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் உயிரிழந்த நபரின் 45 வயது மனைவியும் அவரது சகோதரனும் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
விஷ மருந்து
மூன்று பிள்ளைகளின் தாயான, உயிரிழந்தவரின் மனைவிககு உதவினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவரது சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது கணவரின் மது கோப்பையில் விஷ இரசாயனத்தை கலந்து கொலை செய்ததாக பெலியத்த பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ தினத்தன்று வீட்டில் மது அருந்திய போது ஏற்பட்ட சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பிரேத பரிசோதனையில் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

தமிழ் தலைவர்கள் பெற்றது எதுவுமில்லை ஆயினும் வாய்ச் சொல்லில் வீரரடி..! 17 மணி நேரம் முன்

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri
