இராணுவத்தால் தொற்று நீக்கும் செயற்பாடு பரவலாக முன்னெடுப்பு
கொரொனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடாளாவிய ரீதியில் தொற்றுநீக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் இராணுவம், பொலிசார், நகரசபை மற்றும் சுகாதார பிரிவினரின் பங்குபற்றுதலில் வவுனியா மாவட்டத்தின் முக்கிய பகுதிகள், சனநடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் பாடசாலைகள், பேருந்து நிலையங்கள் என்பன இன்றையதினம் (29) தொற்று நீக்கப்பட்டு வருகின்றது.
இதன்போது நகரசபையின் தீயணைப்பு வாகனங்களால் பொது இடங்கள் நீர்பாய்ச்சி தூய்மையாக்கப்பட்டிருந்ததுடன் தொற்று நீக்கி மருந்துகள் விசிறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நகரசபை பொதுச்சுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையில் இடம்பெற்று வரும் இச்செயற்பாட்டில் அதிகளவான இராணுவத்தினர் கலந்து கொண்டிருந்தனர்.









குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri