மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கு பக்கிங்ஹாம் அரண்மனையில் சிறப்பு வரவேற்பு
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான டெஸ்ட் தொடரானது லோர்ட்ஸ் மைதானத்தில் எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்தை வந்தடைந்த மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு பக்கிங்ஹாம் அரண்மனையில் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பிரித்தானிய மன்னர் சார்ள்ஸுடன் மேற்கிந்திய தீவுகளின் வீரர்கள் கலந்துரையாடியுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணி
மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் கிரைக் பிராத்வைட் தலைமையிலான இந்த மேற்கிந்திய தீவுகள் அணியில் பிரதி தலைவர் பொறுப்பு அல்சாரி ஜோசேப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அணியில் ஜேசன் ஹோல்டர் மற்றும் ஜேய்டன் சீல்ஸ் ஆகிய முன்னணி வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
23 வயது துடுப்பாட்ட வீரரான மிக்கேல் லூயிஸ் மேற்கிந்திய தீவுகளின் உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் வெளிப்படுத்திய சிறந்த ஆட்டத்திற்காக மேற்கிந்திய தீவுகளின் டெஸ்ட் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
இசாய் தொர்னே
அதேநேரம் 19 வயது வேகப்பந்துவீச்சாளாரன இசாய் தொர்னேவும் மேற்கிந்திய தீவுகளின் குழாமில் இணைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி மேற்கிந்திய தீவுகள் குழாமில் கிரைக் ப்ராத்வைட் (தலைவர்), அலீக் அதான்ஸி, ஜொசுவா டா சில்வா, ஜேசன் ஹோல்டர், காவேம் ஹொட்ஜ், டெவின் இம்லாச், அல்சாரி ஜொசேப் (பிரதி தலைவர்), சாமர் ஜொசேப், மிக்கேல் லூயிஸ், சாச்சரி மெக்காஸ்கி, கிர்க் மெக்கன்ஸி, குடாகேஸ் மோட்டி, கேமர் ரோச், ஜெய்டன் சீல்ஸ், கெவின் சின்கிளெய்ர் ஆகியோர் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |