பயணத்தடை தளர்வு காலத்தில் வாகன பயன்பாட்டுக்கு ஏன் தடை ? – ஐ.தே.க
பயணத்தடை தளர்வு காலத்தில் வாகன பயன்பாட்டுக்கு ஏன் தடை விதிக்கப்பட்டுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் 7ம் திகதி வரையில் நாட்டில் பயணத் தடை அமுல்படுத்தப்படுவதாக அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு வரவேற்கப்பட வேண்டியது என சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறெனினும், பயணத் தடை தளர்த்தப்படும் நாட்களில் வாகனங்களை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை சட்டங்களுக்கு முரணானது என தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்தல் ,வைத்தியசாலைகள், வங்கிகள் என்பனவற்றுக்கு செல்வதற்கு மக்களுக்கு அனுமதி உண்டு என்றால் அவர்கள் வாகனங்களின் செல்லவும் அனுமதிக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.
அண்மைய நாட்களில் நாட்டில் அநேக பகுதிகளில் மழையுடனான காலநிலை காணப்பட்டதாகவும், எதிர்வரும் நாட்களிலும் இந்த நிலைமை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளதாகவும் ,இவ்வாறான பின்னணியில் மக்கள் நடந்து சென்று பொருட் கொள்வனவில் ஈடுபடுவது பொருத்தமற்றது என சுட்டிக்காடடப்பட்டுள்ளது.
சம்பளக் கொடுப்பனவுகளுக்காக நிறுவனங்கள் வாகனங்களைப் பயன்படுத்தியே பணத்தை எடுத்துச் செல்ல நேரிடுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.