இந்திய கடற் தொழிலாளர்களுக்கு நாம் ஏன் கால அவகாசம் கொடுக்க வேண்டும்: கா. அண்ணாமலை ஆவேசம்
இந்திய கடற்தொழிலாளர்கள் தமது கடலில் கடற்றொழிலில் ஈடுபட நாம் ஏன் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தலைவர் காத்தலிங்கம் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.
அவர் நேற்றைய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு வினவியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
''பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சொன்ன கதையைத்தான் இன்றும் சொல்கிறார்கள், எங்களுடைய கடற்றொழில் அமைச்சரும் சேர்ந்து கருத்து தெரிவிக்கும் போது, இந்திய மீனவர்கள் அவகாசம் கோரியிருக்கிறார்கள்' என்கிறார். நாங்கள் கால அவகாசம் கொடுக்க எங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது.
அவர்களது கடலில் அவர்கள் கடற்றொழிலில் ஈடுபட நாங்கள் ஏன் கால அவகாசம் கொடுக்க வேண்டும். அண்மையில் இலங்கை கடற்தொழிலாளர்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட போது எல்லை தாண்டிய கடற்தொழிலாளர்கள் என்ற வசனம் இந்தியா பாவிக்கின்றது.
அப்படியாயின் எமது பகுதிக்கு வரும்போது எமக்கு எல்லை இல்லையா? நீங்கள் வந்தால் எல்லை இல்லை, நாங்கள் வந்தால் எல்லை இருக்கிறதா? இது எல்லாம் எங்கள் வளத்தைச் சுரண்டுகின்ற வேலை.
எல்லா நாடும், சீனா ஒருபக்கத்தால்
சுரண்டியது, இந்திய மற்ற பக்கத்தால் சுரண்டுகிறது. ஆளுக்கு ஆள்
போட்டி கூடி இந்தியாவும் சீனாவும் சண்டையில்தான் கொண்டுவந்து விடப்போகிறது''
இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.





மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam

அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
