கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தமை ஏன்? பொலிஸார் வெளியிட்ட தகவல்
இரத்மலானை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக கட்டடத் தொகுதியின் ஆறாவது மாடியிலிருந்து குதித்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என கல்கிஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான ஆய்வகங்கத்தின் முகாமைத்துவ உதவியாளராக அவர் செயற்பட்டு வந்துள்ளார்.
உயிரிழந்த பெண் பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான மினுலி எரந்தி சொய்ஸா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த பெண் மன ரீதியான பிரச்சினைக்காக சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
சிகிச்சை பெறுவதற்காக 2 மாதங்கள் விடுமுறை பெற்று வீடு சென்றுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விடுமுறையை நிறைவு செய்து பணியிடத்திற்கு திரும்பிய பெண் இவ்வாறு பல்கலைக்கழக கட்டடத்தில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளார்.
அத்துடன் தான் பணியாற்றும் அந்த பிரிவில் இருந்து வேறு பிரிவிற்கு இடமாற்றம் ஒன்று வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவரது கோரிக்கைக்கமைய அவருக்கு இடமாற்றமும் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ள கல்கிஸ்ஸ பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
