இலங்கையில் பெண்களுக்கு எச்சரிக்கை! கவனிக்க வேண்டிய நுட்பமான விடயங்கள் (Video)
பெண்களின் சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி பாதரசம் கலந்திருப்பதாக ஆய்வக அறிக்கைகள் உறுதி செய்துள்ளன.
இவ்வாறான அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படக்கூடும் என்பதால், இவ்வாறான தரமற்ற பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என நுகர்வோர் விவகார அதிகாரசபை மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் சருமத்தை வெண்மையாக்கும் பொருட்கள் மற்றும் போலி நாமங்களுடன் சந்தையில் விற்பனைக்கு வரும் பொருட்கள் குறித்து அவதானமாக செயற்பட வேண்டும் என இலங்கையில் பெண்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பொருட்களை பெருமளவு பெண்களே பயன்படுத்தும் போதும் ஒரு சில ஆண்களும் பயன்படுத்துவதால் இது தொடர்பில் அனைவரும் அவதானமாக இருப்பது நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விடயம் தொடர்பில் மக்கள் குரல் நிகழ்ச்சியில் அழகுக்கலை துறையில் இருக்கும் சிலர் பல நுட்பமான விடயங்களை பகிர்ந்து கொண்டனர்.
இது தொடர்பான விரிவான தொகுப்பு காணொளியில்,




