கொழும்பில் குண்டு வைக்க பயிற்சி வழங்கிய நபர் யார்? விசாரணையில் வெளியான தகவல் - செய்திகளின் தொகுப்பு
அண்மையில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர் திருகோணமலை - உப்புவெளி பகுதியை சேர்ந்த முன்னாள் போராளி எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர் புனர்வாழ்வளிக்கப்பட்ட ஒருவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், வெடிகுண்டை கொடுத்த நபர் தனக்கு எப்படி வெடிகுண்டை வைப்பது குறித்து ஆறு நாட்கள் பயிற்சி அளித்ததாகவும் கூறியுள்ளார்.
கடந்த 14ம் திகதி நாரஹேன்பிட்ட பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் வைத்தியசாலையின் கழிவறையில் கைக்குண்டு மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முதல் சந்தேகநபர், பொலிஸாருக்கு தகவல் வழங்கி பரிசு பெறும் நோக்கத்தில் தான் கையெறி குண்டை வைத்தியசாலையில் வைத்ததாக வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
மேலும், கொழும்பில் விஜேராம மாவத்தையில் உள்ள முக்கிய அரசியல்வாதி ஒருவரின் வீட்டில் இருந்து குண்டை பெற்றுக்கொண்டதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட அரச புலனாய்வு சேவை மற்றும் கொழும்பு குற்றப் பிரிவினர் முக்கிய தகவல் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியோடு மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri