குரங்கம்மை பெயர் மாற்றம் தொடர்பில் வெளியான தகவல்
குரங்கம்மை வைரஸின் பெயரை ‘எம்பொக்ஸ்’ (MPOX) என மாற்றுவது தொடர்பில் உலக சுகாதார அமைப்பு அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக சுகாதார நிறுவனத்தினால் இவ்விடயம் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரங்கம்மையின் (மங்கி பொக்ஸ்) பெயர் மாற்றம் தொடர்பில் கடந்த காலங்களில், அமெரிக்கா கருத்து தெரிவித்திருந்தது.
மங்கி பொக்ஸ் என்ற பெயர் ஒரு குறிப்பிட்ட குழு அல்லது மூன்றாம் தரப்பினருக்கு பாரபட்சத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.
பொது சுகாதார நிபுணர்கள் மற்றும் ஆர்வலர்கள்

பொது சுகாதார நிபுணர்கள் மற்றும் எல்ஜிபிடி ஆர்வலர்கள் இதேபோல் வைரஸின் பெயரைக் கைவிடுமாறு அழைப்பு விடுத்தனர்.
இது வைரஸ் 1958 இல் கண்டுபிடிக்கப்பட்டது, எனினும் இது கடந்த வசந்த காலத்தில் உலகயாவிய ரீதியில் பரவலாக பரவத் தொடங்கியது.
"தற்போதைய பின்னணியில், இந்த வைரஸ் ஆப்பிரிக்கர் என்று தொடர்ந்து குறிப்பிடுவதும், பெயரிடுவதும் தவறானது மட்டுமல்ல, பாரபட்சமானது மற்றும் களங்கம் விளைவிப்பதும் ஆகும்" என்று விஞ்ஞானிகள் குழு ஜூன் மாதம் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
வேகமாக பரவும் நோய்

இந்த வைரஸ், மே மாதத்தில் அமெரிக்காவிற்குள் வேகமாகப் பரவத் தொடங்கியது.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் தரவுகளின்படி, நோய் பரவலின் போது அமெரிக்கா கிட்டத்தட்ட 30,000 நோய்த்தொற்றுகளைப் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், அரசாங்கத்தின் தடுப்பூசி உந்துதலின் உதவியுடன், ஆரம்ப நெருக்கடி தணிந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,
தற்போது, உலகம் முழுவதும் 20 ஆயிரத்து 774 பேர் மங்கி பொக்ஸ் எனப்படும் குரங்கம்மையினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam
2000ஆம் ஆண்டு முதல் இதுவரை அதிக வசூல் செய்த இந்திய படங்கள் என்னென்ன தெரியுமா? முழு பட்டியல் இதோ Cineulagam
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
வெங்கட் பிரபு படத்திற்காக சம்பளத்தை குறைத்துக் கொண்டாரா நடிகர் சிவகார்த்திகேயன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam