மஹிந்தவின் சகோதரர் திட்டியதால் பதவியை இராஜினாமா செய்த முக்கியஸ்தர்
இலங்கையின் பிரதான தரப்பு அரச அதிகாரி ஒருவர் தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தான் விரைவில் பதவியில் இருந்து நீங்குவதாக அந்த அதிகாரியினால் தற்போது வரையிலும் அரசியல்வாதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இராஜினாமா செய்யவுள்ள அதிகாரி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் இருந்து இலங்கையின் பொருளாதார தொடர்பில் செயற்படும் பிரதான தரப்பு அதிகாரியாகும்.
அமைச்சர் சமல் ராஜபக்ஷ கடந்த சில நாட்களாக அவரை கடுமையாக திட்டி விமர்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உர நெருக்கடி மற்றும் வெளிநாட்டு பணியாளர்களின் பணம் இலங்கைக்கு அனுப்பப்படும் விடயம் தொடர்பில் அமைச்சரினால் இவ்வாறு கடுமையாக திட்டியதாக தெரியவந்துள்ளது.
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri