பிரதமர் பதவியை ஏற்குமாறு அறிவித்தபோது தப்பியோடியது யார்..! ரணில் கேள்வி
நாட்டில் பிரதமர் பதவியை ஏற்குமாறு அறிவித்த போது தப்பியோடியது யார் பிரதமர் பதவிக்கு கையேந்தியது போன்று வேறு எந்த நாடாவது உலகில் இருக்க முடியுமா என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கேள்வியெழுப்பியுள்ளார்.
திருகோணமலை (Trincomalee) மாவட்ட அரசியல் செயற்பாட்டாளர்களுடன் திருகோணமலை இந்து கலாசார நிலையத்தில் நேற்று (04) நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரம்
இந்த நாட்டின் அப்போதைய நிலையை நான் நினைவுகூரத் தேவையில்லை.

சிலரது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. ஊருக்கு வரக்கூடாது என அச்சுறுத்தினர். ஆனால் 2022 ஜூலை மாதத்தில் நாட்டின் மீட்சிக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்தோம்.
இந்த அமைச்சர்கள் அனைவரும் எங்களுடன் இணைந்து, 2023ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை வழமை நிலைக்கு கொண்டு வர முடிந்தது.
இதனால் தற்போது எம்மால் வங்குரோத்து நிலையில் இருந்து மீள முடிந்துள்ளது.
கடன் வழங்கிய நாடுகள்
இந்நிலையில், சர்வதேச நாணய நிதியம் மற்றும் எங்களுக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாட்டை காண முடிந்தது.
2042 வரை எங்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதமர் பதவியை ஏற்குமாறு அறிவித்த போது தப்பியோடியது யார்? பிரதமர் பதவிக்கு கையேந்தியது போன்று வேறு எந்த நாடாவது உலகில் இருக்க முடியுமா.
எனது நண்பர் அனுரகுமார திசாநாயக்கவும் அப்போது ஓடி ஒழிந்தார் என ஜனாதிபதி மேலும் தொிவித்தாா்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியலில் டம்மி ஆகிவிட்டதா மீனா ரோல்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.. புரோமோ வீடியோ Cineulagam
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri