விடுதலைப் புலிகளின் தலைவரை விட அதிகமாக தாக்குதலுக்கு உள்ளான நபர் நானே! அமைச்சர் வெளியிட்ட தகவல்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை விட பொதுமக்களிடத்தில் நானே அதிக தாக்குதல்களுக்கு உள்ளாகியிருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
எனது உருவ பொம்மைகள் அதிகளவில் எரிக்கப்பட்டுள்ளன, பிரபாகரன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் உருவ பொம்மைகள் கூட இவ்வாறு இதுவரை எரிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
செயற்கை உரம் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், விவசாயிகள் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தியிருந்தனர்.
இதன்போது, நடத்தப்பட்ட போராட்டங்களில் எனது உருவ பொம்மைகளை விவசாயிகள் எரித்தனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
