இரா.சம்பந்தனுக்கு பின்னர் தலைமை பொறுப்பை ஏற்கப் போவது யார்? வெளியான தகவல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலிமை தொடர்ந்தும் தக்கவைக்கப்படுவதற்கு இரா.சம்பந்தனின் தலைமைக்கு பின்னர் கூட்டுத் தலைமை ஒன்றின் அவசியம் குறித்து கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் முன்னாள் அவை தலைவர் சி.வி.கே சிவஞானம் இதனை கூறியுள்ளார். இது தமது தனிப்பட்ட கருத்து மாத்திரமல்ல. யதார்த்தமான கருத்துமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
உடல் நல பாதிப்பால் தொடர்ச்சியாக மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் அவர், மருத்துவர்களின் ஆலோசனையின் பிரகாரமே இந்த முடிவை எடுக்கக்கூடும் எனவும் அந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து கேட்டபோதே அவர் எமது செய்தி சேவைக்கு இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
இரா.சம்பந்தன் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் நிலையில் விலகுவது குறித்து ஆராயப்படவில்லை என்றும் சி.வி.கே சிவஞானம் தெரிவித்தார்.
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு பின்னர், கூட்டமைப்புக்கு தலைமையேற்க, அத்துடன் கட்சியை ஒற்றுமைப்படுத்திக் கொண்டு செல்ல தற்போதைய நிலையில் ஆளுமையை தேடுவதைக் காட்டிலும் கூட்டுத்தலைமையே பொருத்தமானது என்பது தமது கருத்தாகும்.
இதன் மூலமே கூட்டமைப்பில் உள்ள மூன்று கட்சிகளும் இணைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கான வலிமையான பேரம் பேசும் சக்தியாக நிலைத்திருக்கமுடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 4 மணி நேரம் முன்

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
