யுத்தத்தினால் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு தீர்வு கிடைக்கும்..! அநுர தரப்பு தெரிவிப்பு
நாட்டில் இரத்த ஆறு மீண்டும் ஓடாத வகையிலும் யுத்தம் காரணமாக அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் நீதியான விசாரணைகள் இடம்பெறும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இணைய பத்திரிகை ஒன்றின் ஆசிரியர் தலையகத்திற்கு பதில் அளிக்கும் வகையில் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பேரவலத்தின் பின்னணியில் வெளிவந்த கோட்டாபயவின் முக்கிய அறிவிப்பு! ஒரே நாளில் சுரேஷ் சலேவிடம் ஏற்பட்ட மாற்றம்
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடர்பு இருப்பது
மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்களில் இன, மத, பேதங்களைக் கடந்து மக்கள் மத்தியில் நல்லிணகத்தை ஏற்படுத்தி இந்த நாட்டை கட்டியெழுப்பும் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பிலும் விசாரணைகளை நடத்தி மக்கள் பணத்தை மீட்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன், கிடப்பில் இருந்த பல வழக்குகளை தூசு தட்டி நீதியை நிலைநாட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
நீதித்துறையும் சுயாதீனமாக இயங்குகின்றது. நாடு பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மக்களையும், நாட்டையும் பொருளாதார ரீதியாக மீட்கும் செயற்பாட்டை இவ் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
இதனை மக்களும் புரிந்து கொண்டுள்ளார்கள். 75 வருட கால அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்துள்ளது.
அந்த மக்களின் நம்பிக்கையை நாம் முன்னெடுத்து வருகின்றோம். கடந்த கால அரசாங்கங்களால் முன்னெடுக்கப்படாது கிடப்பில் இருந்த உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணை எந்தவித அழுத்தங்களுக்கும் அடிபணியாது நீதியாக இடம்பெற்று வருகின்றது. அதில ராஜபக்ச குடும்பத்திற்கு தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளது. அதனால் அவர்கள் பீதியடைந்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
ராஜபக்ச குடும்பத்தை மின்சார நாற்காலியில் ஏற்றுவோம் எனக் கூறிய தமிழ் தேசிய கட்சிகளும் சரி, எதிர் கட்சிகளும் சரி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பில் மௌனம் காத்து வருவதுடன் அந்த விசாரணைகளை குழப்பும் வகையில் சிலர் எதிரணியிலும் செயற்பட்டும் வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை இந்த அரசாங்கம் உறுதி செய்துள்ளது. அரசியல் நோக்கோடு சிலர் அதனை குழப்ப முயல்கிறார்கள். அதனை ஊடகவியலாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆட்சிக்கு வந்த உடன் அனைத்தும் செய்து விட முடியாது. காலம் தேவை. கட்டம் கட்டமாகவே ஒவ்வொரு விடயங்களையும் செய்ய முடியும். அதனையே எமது அரசாங்கமும் செய்து வருகின்றது.
முள்ளிவாய்கால் பேரவலத்திலும், நடந்த யுத்தத்திலும் நாமும் நமது உறவுகளையும், உறவினர்களையும் இழந்து இருக்கின்றோம். அந்தப் போரின் வலியும் வேதனையும் எமக்கும் புரியும். அதற்கும் நீதி தேவை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் யார் என்பது வெளிச்சத்துக்கு வருகிறது. அவர்கள் தான் முள்ளிவாய்கால் பேரவலம் மற்றும் படுகொலைகளுடனும் தொடர்பு உடையவர்கள். அவர்களுக்கான தண்டனை கிடைப்பதை ஏன் எதிர்க் கட்சியில் இருக்கும் தமிழ் தேசிய கட்சிகள் கூட மௌனம் காத்து வருகின்றன.
எமது அராசங்கம் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை எம்மிடம் உள்ளது. மக்களும் தெளிவாக உள்ளார்கள். மக்கள் எதிர்பார்க்கும் விடயங்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்போம். அதனை மக்கள் புரிநது கொண்டுள்ளனர்.
எமது அரசாங்கத்தால் மட்டுமே அதனை செய்ய முடியும். அரசியல்வாதிகளின சூழ்சிகளுக்கு எமது கட்சி எடுபடாது நிதானமாக செயற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.