குரங்கு அம்மை உலகளாவிய அவசரநிலையாக அறிவிப்பு: உலக சுகாதார நிறுவனம்
உலகளாவிய ரீதியில் 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவரும் குரங்கு அம்மை, அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதையடுத்து குரங்கு அம்மை "உலகளாவிய அவசரநிலை" என உலக சுகாதார அமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
உலக அவசரக் குழு உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து இல்லாத போதிலும்,அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உலக சுகாதார அமைப்பின் தலைவர் இத்தகைய நடவடிக்கையை எடுத்தது இதுவே முதல் முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாதாரண சூழ்நிலை
பல தசாப்தங்களாக மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்காவின் சில பகுதிகளில் குரங்கு அம்மையானது கண்டறியப்பட்டாலும், அது கண்டத்திற்கு அப்பால் பெரிய பரவலை ஏற்படுத்தவில்லை. அல்லது மக்கள் மத்தியில் பரவலாக பரவுவதாகவோ தெரியவில்லை, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் பிற இடங்களில் அதிகாரிகள், குறைந்த எண்ணிக்கையான தொற்றுநோய்களையே கண்டறிந்தனர்.
எனினும் தற்போது, அது ஒரு அசாதாரண நிகழ்வாக மாறியுள்ளது. இது பல நாடுகளில் பரவக்கூடும் என்பதால், ஒருங்கிணைந்த உலகளாவிய பதில் தேவைப்படுகிறது. எனவே உலக சுகாதார அமைப்பு குரங்கு அம்மையை அவசரநிலையாக அறிவித்துள்ளது.
பதிவாகிய இறப்புக்கள்
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்களின்படி, மே மாதத்தில் இருந்து 74 நாடுகளில் 16,000 க்கும் மேற்பட்ட குரங்கு காய்ச்சல் பதிவாகியுள்ளன.
எனினும் இன்றுவரை ஆப்பிரிக்காவில் மட்டுமே இறப்புகள் பதிவாகியுள்ளன, இதேவேளை அமெரிக்காவில், குரங்கு அம்மை ஒரு புதிய பாலியல் பரவும் நோயாக நிலைபெறக்கூடும் என்று சில வல்லுநர்கள் ஊகித்துள்ளனர், அங்கு 1.5 மில்லியன் ஆண்கள் அதிக ஆபத்தில் இருப்பதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இராணுவத்தின் கொடூரத்தால் தமிழர்களுக்கு எவ்வளவு வேதனை..! சிங்கள இளைஞன் வெளியிட்ட தகவல் |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
