ஐபிஎல் 2026! வரலாற்று சாதனை தொகைக்கு விலை போன இலங்கை வீரர்
இந்திய பிரீமியர் லீக் (IPL) மினி ஏலத்தில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண வரலாற்றுச் சாதனை தொகைக்கு ஏலம் போயுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மதீஷவை, 18 கோடி இந்திய ரூபாய் (சுமார் 2.2 மில்லியன் அமெரிக்க டொலர்) என்ற மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது.
22 வயதான பத்திரணவை பெற பல ஐபிஎல் அணிகள் கடும் போட்டியில் ஈடுபட்ட நிலையில், இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவரது சேவையை உறுதி செய்தது.
வரலாற்றில் பதிவான இலங்கை வீரர்
இது, டி20 கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் மிகச் சிறந்த இளம் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக அவரது மதிப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.
‘ஸ்லிங்கி’ பந்து வீச்சு முறை, அதிவேகம், குறிப்பாக இறுதி ஓவர்களில் துல்லியமான பந்துவீச்சு ஆகியவற்றால் பத்திரண சர்வதேச கிரிக்கெட் மற்றும் ரி20 லீக் போட்டிகளில் ரசிகர்களையும் நிபுணர்களையும் கவர்ந்துள்ளார்.

அண்மைய தொடர்களில் அவர் வெளிப்படுத்திய திறமைகளின் காரணமாக, ஏலத்தில் அவரது விலையை கணிசமாக உயர்த்தியது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியன் பிரிமியர் லீக் ஏல வரலாற்றில் அதிக விலைக்கு விற்கப்பட்ட இலங்கை வீரர் என்ற பெருமையை மத்தீஷ பத்திரண பெற்றுள்ளார்.