சமூக ஊடகங்களில் பரிசுகள் வழங்குவதாக மோசடி: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பண்டிகைக் காலத்திலும், பேரிடர் காலத்திலும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மோசடிகள் அதிகரித்து வருவதால் இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு குழு (இலங்கை CERT), பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களாக சமூக ஊடக தளங்கள் வழியாக இணைய மோசடி மற்றும் பணமோசடி முயற்சிகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பரிசுகளை வழங்குவதாக மோசடி
மோசடியாளர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தி போலி விளம்பரங்கள், வெகுமதிகள் மற்றும் பரிசுகளை வழங்குவதாக பொதுமக்களை தவறாக வழிநடத்துகின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், சில தனிநபர்களின் வங்கிக்கணக்குகளுக்குள் இரகசியமாக உள்நுழைந்து , மோசடி செய்பவர்களால் கணக்குகள் கையகப்படுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
எனவே சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை தொடர வேண்டாம் என்றும், தனிப்பட்ட தகவல்களைப் பகிரும்போதும்,தெரியாத நபர்கள் அல்லது சரிபார்க்கப்படாத வலைத்தளங்களை அணுகும்போதும் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கடவுச்சொற்களை ஒருபோதும் வெளி நபர்களிடம் பகிர வேண்டாம் என்றும் இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு குழு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri