அவசர உதவிகளின் போது உலகம் கறுப்பு, வெள்ளை இன பேதம் பார்க்கிறது- உலக சுகாதார நிறுவனம்
அவசர உதவிகளின் போது கறுப்பின மற்றும் வெள்ளை மக்களுக்கு சமமான கவனம் செலுத்தப்படுவதில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கு வழங்கப்பட்ட உதவியின் ஒரு பகுதியே உலகின் ஏனைய இடங்களின் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு வழங்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அத்தனோம் சுட்டிக்காட்டியுள்ளார்
உலகம் முழுவதையும் பாதிக்கிறது என்பதால் உக்ரைனுக்கு உதவுவது முக்கியமானது.
எனினும் எத்தியோப்பியா, ஏமன், ஆப்கானிஸ்தான் அல்லது சிரியாவில் உள்ள திக்ரே மாகாணம் அதே கவனத்தைப் பெறவில்லை என்று அத்தனோம் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் உலகம் உண்மையில் கறுப்பு மற்றும் வெள்ளை வாழ்க்கைக்கு சமமான கவனம் செலுத்துகிறதா என்று தமக்கு தெரியவில்லை என்று டெட்ரோஸ் அத்தனோம் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் உலகம் மனித இனத்தை ஒரே மாதிரியாக நடத்தவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எத்தியோப்பியன் பிராந்தியத்திற்கு நாள் ஒன்றுக்கு 100 பாரிய பாரவூர்திகளில் உயிர் காக்கும் மனிதாபிமான பொருட்கள் தேவை என்றும் டெட்ரோஸ் அத்தனொம் குறிப்பிட்டுள்ளார்.





நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam

அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
