மனிதனை கொல்லும் “ஒமிக்ரோன்”- உலக சுகாதார அமைப்பின் முக்கிய அறிவிப்பு!
மனிதர்களிடையே உயிரிழப்பை ஏற்படுத்துவதன் காரணமாக, ஒமிக்ரோன் வைரஸ் தொற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரசின் புதியவகை மாறுபாடான ஒமிக்ரோன் வைரஸ் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் டெல்டா விகாரத்தை விட குறைவான தாக்கத்தை ஏற்படுத்துவதாக கருதப்படுகிறது.
இதன் காரணமாக இந்த வைரசை “சாதாரணமானது” என்று வகைப்படுத்தப்படக்கூடாது என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்துரைத்துள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், “டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஒமிக்ரோன் குறைவான தீவிரத்தன்மை கொண்டதாகத் தோன்றுகிறது.
எனினும் இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. முந்திய மாறுபாடுகளைப் போலவே, ஒமிக்ரோனும் மக்களை வைத்தியசாலைகளில் சேர்க்கிறது. அத்துடன் இறப்புக்களை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
போர் காலத்தில் கூட இப்படி நடக்கவில்லை! - சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல் (பத்திரிக்கை கண்ணோட்டம்) |