முல்லைத்தீவில் வேப்பமரத்தை தாக்கும் வெண் ஈ குடம்பிகள்
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாயில் தென்னை மரங்களை அதிகளவில் தாக்கும் வெண் ஈயின் தாக்கம் அங்குள்ள வேப்பமரங்களிலும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த வெண் ஈயின் தாக்கம் தொடர்பில் விவசாயிகள்தெரிவிக்கையில்,
“வெண் ஈயின் குடம்பிகளாக இனம் காணப்படும் இவை வேப்பமரத்தின் தண்டுகளில் ஒட்டிப் படர்ந்துள்ளன.
வெண் ஈயின் தாக்கம்
மரத்தின் கீழாக உள்ள காபட் வீதியும் நிலமும் கருநிறத்தில் தோற்றமளிப்பதோடு மரத்திற்கு கீழ் நிற்கும் போது கிருமிநாசினியின் மணம் வீசுகின்றது.
அத்துடன் நீண்ட நேரம் அந்த வாசனையை சுவாசிக்க நேர்ந்தால் மயக்கம் ஏற்படுவதாகவும் நீண்ட நேரத்திற்கு மூக்கின் ஓரங்களில் அரிப்பு ஏற்படுவதாகவும்” அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொக்கிளாய் முல்லைத்தீவு வீதியில் மணலாற்றுக்குத் திரும்பும் சந்தியில் இருந்து கொக்கிளாய் நோக்கிய பாதையில் 100 மீற்றர் தொலைவில் கடற்கரைப்பாக்கமாக வீதியின் ஓரத்தில் 23/2 என பெயர் குறிக்கப்பட்ட பாலத்தின் அருகில் உள்ள இரு வேப்பமரங்களிலேயே இந்த தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளது.
விவசாயியின் அவதானிப்பின் படி, வெண் ஈயின் குடம்பிகளாக இவை இருப்பின் வெண் ஈயின் பரம்பல் இனிவரும் நாட்களில் விரைவாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |