வெடுக்குநாறி மலை தமிழர்களின் சொத்து: கைதாகிய தரப்பு சுட்டிக்காட்டு
வெடுக்குநாறி மலை தமிழர்களின் சொத்து எனவும், அதை நாம் தொடர்ந்து ஒன்றுபட்டு பாதுகாக்க வேண்டும் எனவும் வெடுக்கு நாறி மலையில் கைது செய்யப்பட்டு விடுதலையான எஸ்.தவபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி வழிபாட்டின் போது ஆலய பூகசர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யபட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டு, இன்று (19.03.2024) அவர்கள் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அநீதியான முறையில் கைது
இந்நிலையில், விடுவிக்கப்பட்டதும் 8 பேரும் நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வந்த போது அவர்களது உறவினர்கள், மனைவிமார், பிள்ளைகளை ஆரத்தழுவி கண்ணீர் மல்கி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதன்போபது கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களும், கைதாகி விடுதலையானவர்களும் விடுதலைக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கைதாகி விடுதலையான எஸ்.தவபாலசிங்கம் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போது,
வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மிகவும் அநீதியான முறையில் நாம் கைது செய்யப்பட்டிருந்தோம்.
பொலிஸார் வேணும் என்றே எம் மீது பொய் வழக்கை உருவாக்கி 12 நாட்கள் விளக்கமறியலில் இருந்து விடுதலையாகியுள்ளோம்.
உறவுகளுக்கு நன்றிகள்
பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட குற்றசாட்டுகள் எவையும் நிரூபிக்கப்படவில்லை. எங்களுடைய விடுதலைக்காக பல உறவுகள் தொடர்ச்சியாக குரல் கொடுத்துள்ளார்கள்.
மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், புலம்பெயர் உறவுகள் எனப் பலரும் குரல் கொடுத்திருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக சட்டத்தரணிகள் எமக்காக போராடி இருந்தார்கள்.
வவுனியாவிலும், நெடுங்கேணியிலும் பெரியளவிலான போராட்டம் நடைபெற்றது. அதில் பலரும் பங்குபற்றி எமக்காக குரல் கொடுத்திருந்தார்கள்.
எமக்காக குரல் கொடுத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள். வெடுக்குநாறி மலை எங்களது சொத்து அதை நாம் தொடர்ந்து ஒன்றுபட்டு பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |













தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
