நாடு இருக்கும் நிலைமையில் எந்த மாடு தேர்தலை நடத்துமாறு கோரும்-பிரதியமைச்சர் சாந்த பண்டார கேள்வி
நாடு தற்போது எதிர்நோக்கி வரும் நெருக்கடியான காலக்கட்டத்தில் எந்த மாடு தேர்தல் ஒன்றை நடத்துமாறு கோரும் என ஊடகத்துறை ராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது தேர்தலை நடத்தும் தருணமல்ல

நாடு நெருக்கடியான நிலைமையை எதிர்நோக்கி வரும் நேரத்தில் தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சிகள் கோருகின்றனர். எந்த மாடு இந்த நேரத்தில் தேர்தலை நடத்துமாறு கோரும். பைத்தியமா, இந்த தருணத்தில் நாட்டில் தேர்தலை நடத்த முடியுமா?.
தேர்தல் நடத்துமாறு கோருவது பைத்தியக்காரத்தனம். உணவு பணவீக்கமும் பொருள் பணவீக்கமும் அதிகரித்துள்ளது. அவற்றை குறைக்க வேண்டும். இவற்றால் துயரங்களுக்கு உள்ளாகி இருக்கும் மக்களை அழுத்தங்களில் இருந்து மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமே அன்றி தேர்தலை நடத்துவதல்ல.
மக்களின் நிலைப்பாடு இதுவல்ல என சிலர் கூறுகின்றனர். அப்படியானால் எங்களது கூட்டங்களில் மக்கள் அந்த நிலைப்பாடு பிரதிபலிக்கவில்லையா. மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டத்தில் ஆயிரம், இரண்டாயிரம் பேர் கூடினால், அதுதான் மக்களின் நிலைப்பாடுகளின் பிரதிபலிப்பு
மக்கள் தேர்தலை கேட்கவில்லை

ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் ஆயிரம், இரண்டாயிரம் பேர் கூடினால், அதுதான் மக்களின் நிலைப்பாடு என்கின்றனர். பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் 5 ஆயிரம் பேர் கூடினால், அது மக்களது நிலைப்பாடுளின் பிரதிபலிப்பு இல்லை என்கின்றனர்.
இது என்ன கணக்கியல் விஞ்ஞானம், என்ன கணிதம்.
தேர்தல்களுக்கு செல்ல வேண்டும் என்பது தனியான விடயம். நாடு தற்போது கேட்பது தேர்தலை அல்ல.
மக்கள் தேர்தலை கோரவில்லை பொருளாதார மறுசீரமைப்பை ஏற்படுத்தி 74 வருடங்களாக தவறிய இடங்களில் திருத்தங்களை செய்து, தவறான பொருளாதார முகாமைத்துவத்தை சரி செய்து, அபிவிருத்தியான நாட்டை எதிர்கால சந்ததியிடம் ஒப்படைப்பதே நமது கடமை எனவும் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.