இராஜாங்க அமைச்சு பதவியை ஏற்ற சாந்த பண்டார இடைக்கால அரசாங்கம் தொடர்பில் வெளியிட்ட தகவல்
இராஜாங்க அமைச்சராக நேற்றைய தினம் பதவியேற்றுக் கொண்ட சாந்த பண்டார தாம் குறித்த பதவியை ஏற்றமைக்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதன்படி 11 கட்சிகளால் முன்வைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கம் சாத்தியமற்றது என்ற காரணத்தினாலேயே தாம் இராஜாங்க அமைச்சுப் பதவியை ஏற்றுக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் ஊடகவியலானர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
சாந்த பண்டார சேதனப் பசளை உற்பத்தி, மேம்பாடு மற்றும் விநியோக ஒழுங்குபடுத்தல், நெல், தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழ வகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்திகள் மற்றும் உயர் தொழிநுட்ப கமத்தொழில் இராஜாங்க அமைச்சராக நேற்றைய தினம பதவியேற்றிருந்தார்.
இந்த நிலையில் அவர் கட்சியின் கொள்கைக்கு எதிராக செயற்பட்டுள்ளதால் கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்குவதற்கும், அவருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறானதொரு சூழலிலேயே சாந்த பண்டார தாம் இராஜாங்க அமைச்சுப் பதவியை ஏற்றமைக்கான காரணத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார்.



