எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே! நாடு திரும்பிய கையோடு பிரதமர் கேள்வி
எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே என்று நாடு திரும்பிய கையோடு பிரதமர் ஹரிணி அமரசூரிய கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(23) பிற்பகல் உரையாற்றும்போதே கேள்வி எழுப்பினார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை
“எனக்கு எதிராக முன்வைக்கப்படும் எனக் கூறப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே? அதை எதிரணி மீளப்பெற்றுவிட்டதா?"
"எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை வரும் என்றுதானே சுவிஸில் இருந்து நான் இன்று அவசரமாக வந்தேன்.அந்தப் பிரேரணை எங்கே?" - என்றும் அவர் சிரித்தபடியே வினா தொடுத்தார்.

சுவிட்சர்லாந்தில் இருந்து இன்று பிற்பகல் நாடு திரும்பிய கையோடு நாடாளுமன்றம் வந்தார் பிரதமர் சபையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டு, எதிரணிக்கு உரிய பதிலடி கொடுத்துள்ளார்.
பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கையெழுத்திடப்படுவதாக அண்மைக் காலமாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வீட்டுக்கு போனதும் 2 நாள் இதை தான் செய்தேன்! பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா Exclusive LIVE Manithan
ரஞ்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் 4 ஓட்டங்களில் அவுட்: 6 விக்கெட்டுகளை அள்ளிய வீரர்..சுருண்ட கோவா News Lankasri
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam