பெரும் உதவி செய்த ரணிலுக்கு இறுதியில் அநுர கொடுத்த அதிர்ச்சி
ஜனாதிபதியாக அநுர குமார வெற்றிபெறுவதற்கு ரணில் விக்ரமசிங்கதான் உதவி புரிந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ரணிலுக்கு அநுர இழைத்த அநீதிகள்..
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரசியலுக்குள் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை யாரும் நம்பப் போவதில்லை. ரணில் விக்ரமசிங்க, அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற உதவினார்.

ஜனாதிபதியாக அநுர குமார பதவியேற்பதற்கு முன்னதாகவே, நல்லாட்சி அரசாங்கத்திற்கு முன்னரெல்லாம் ரணிலுடன் ஒன்றாக வேலை செய்து, ஒன்றாக அரசியல் செய்தார் அநுர குமார.
ஆனால், பின்னரான நாட்களில் ரணிலுக்கு, அநுர குமார இழைத்த அநீதியை நாங்கள் பார்த்தோம். அநுர குமாரவிற்கு இவ்வளவு உதவிகளை செய்த தனக்கு அவர் இழைத்த அநீதிகளைப் பார்த்து ரணில் விக்ரமசிங்க அதிர்ச்சியடைந்திருப்பார்.

இன்னும் அரசியல் பரப்பில் அநுர குமாரவை யாரேனும் நாம்புவார்களா. ரணில் விக்ரமசிங்கவுக்கு, அநுர குமார இழைத்த அநீதிகளை பார்த்த எவரும் எதிர்வரும் நாட்களில் அரசியலுக்குள் அநுரவை நம்ப மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
வீட்டுக்கு போனதும் 2 நாள் இதை தான் செய்தேன்! பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா Exclusive LIVE Manithan