அநுரவின் ஆட்சியில் கைது செய்யவும் சோதனையிடவும் இராணுவத்திற்கு விசேட அதிகாரங்கள்!
தேசியமக்கள் சக்தி ஆட்சியில் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரங்களால் வடக்கு கிழக்கு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இராணுவத்திற்கு வெளிப்படையாகவே வாகனத்தை தடுத்து நிறுத்தவோ, கைது செய்யவோ, உடைமையில் இருக்கின்ற பொருட்களை பறிமுதல் செய்யவோ அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அதிகாரங்களால் வடக்கு, கிழக்கு மக்கள் பாதிக்கப்பட உள்ளனர்.எந்தவித பிடியாணையும் இன்றி, எந்தவித அறிவித்தலுமின்றி கைது செய்யக்கூடிய ஒரே ஒரு சட்டம் பயங்கரவாத தடைச்சட்டம்.
இந்தப் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் முற்றுமுழுதான அதிகாரத்தை இராணுவத்திற்கும் ,முப்படையினருக்கும் வழங்கினால் பாதிக்கப்படுவது எமது மக்களே என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam