புதிய அமைச்சரவை குறித்து நாடாளுமன்றில் கேள்வி எழுப்பிய அநுர
முழுமையான அமைச்சரவை எப்போது நியமிக்கப்படும் என்பதை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நான்கு அமைச்சரவை அமைச்சர்கள் மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளதாகவும், பிரதமருடன் இணைந்து 5 பேர் மாத்திரமே அரசாங்கத்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சர்கள் இல்லாததால், நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகள் புறக்கணிக்கப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
முழுமையான அமைச்சரவையை நியமிக்க அரசாங்கம் தவறியதன் காரணமாக நாடாளுமன்ற செயற்பாடுகளை சீர்குலைக்க முடியாது.
இந்த விடயத்தில் சபாநாயகர் தலையிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.






16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
