சாவகச்சேரி வைத்தியசாலைக்கு புலம்பெயர் மக்களிடமிருந்து சேகரித்த நிதிக்கு என்ன நடந்தது : அகிலன்
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவுக்காக மட்டும் உலக மக்களிடம் தென்மராட்சி அபிவிருத்தி கழகத்தால் சேர்க்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது என கனடா தென்மராட்சி அபிவிருத்தி கழகத்தின் முன்னாள் சர்வதேச தலைவர் அகிலன் முத்துக்குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சாவகச்சேரியில் நேற்று(18) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
ஆளணிப் பற்றாக்குறை
மேலும் தெரிவிக்கையில், சத்திர சிகிச்சை கூட திட்டத்தை ஏன் சரியாக நடத்த முடியவில்லை. ஆளணிப் பற்றாக்குறை உள்ள இடத்திற்கு எதற்கு உபகரணங்களை வழங்கினீர்கள்.
கறள் கட்டுவதற்கா? தென்மராட்சி அபிவிருத்தி கழகத்தினர் மின் பிறப்பாக்கியை வழங்கியிருக்கலாமே?வைத்தியர் அர்ச்சுனா சொன்னதை மிகைப்படுத்த வேண்டாம்.
தென்மராட்சி அபிவிருத்தி கழகத்தின் சர்வதேச கிளைகளில் உள்ள 23 மில்லியன் ரூபா பணத்தை தாயகத்திற்கு அனுப்பி புதிய நிர்வாகத்தை பொதுமக்கள் பங்கேற்புடன் தெரியவேண்டும்.
தான்தோன்றித்தனமாக குறிப்பிட்ட சிலர் வேலைத்திட்டங்களை செய்யாது அனைத்து பொது மக்கள் கருத்தறிந்து செய்யவேண்டும்.
சாவகச்சேரி வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத்திலும் தென்மராட்சி அபிவிருத்தி கழகத்தின் அங்கத்தவர்கள் பெரும்பாலும் ஒரே நபர்களே இருக்கின்றனர். இந்நிலை மாற்றப்பட வேண்டும்.
சாவகச்சேரி வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கம் கலைக்கப்பட வேண்டும் என மக்கள் தீர்மானித்தால் அது அவ்வாறே செய்யப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
You may like this.....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
