தேசிய மக்கள் சக்தி, யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தை சந்தித்து கலந்துரையாடல்
தேசிய மக்கள் சக்தியினருக்கும் யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தினருக்குமிடையிலான கலந்துரையாடல் நேற்று (18.07.2024) இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தேசிய கட்சிகளை சேர்ந்தவர்கள் கடந்த ஒருசில வாரங்களுக்கு முன்பு வணிகர் கழகத்தை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டனர்.
இதன்போது, தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வு, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு அரசியல் அமைப்பிலுள்ள 13ஆவது சீர்திருத்தினை நடைமுறைபடுத்துவது தொடர்பாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என வணிகர் கழகம் கோரிக்கை விடுத்திருந்தது.
விரிவான கலந்துரையாடல்
அதற்கிணங்க, யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தினரை தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த (JVP) நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களுடைய அமைப்பினைச் சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி உட்பட 5 பேர் கொண்ட உயர் மட்டக்குழுவினர் வருகைதந்து யாழ் வணிகர் கழகத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் உட்பட சில புத்திஜீவிகளுடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இந்தக் கலந்துரையாடலில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், ஜனாதிபதி சட்டத்தரணி உப்புல் குமார பெரும, தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன், யாழ்ப்பாணம் வணிகர் சங்க தலைவர் மற்றும் யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் உறுப்பினர்கள் அங்கத்தவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |