சுனாமி பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடம்: மக்கள் விடுத்துள்ள கோரிக்கை
அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதியில் ஆயுர்வேத மத்திய மருந்தகம் மற்றும் சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவைக்கும் இடைப்பட்ட பகுதியில் கடந்த 2004 ஆண்டு சுனாமி பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடம் இதுவாகும்.
தற்போது இக்கட்டடத்தில் சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதுடன் பாதுகாப்பற்ற இடமாகவும் காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் பாவனை
இது தவிர குறித்த கட்டடத்தில் இரவு வேளையில் போதைப்பொருள் பாவனை இடம்பெற்று வருவதற்கான அடையாளம் தென்படுவதுடன் அருகில் பாடசாலை ஒன்றிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
எனவே குறித்த கட்டடம் அமைந்துள்ள பகுதியை சந்தையாக மாற்றி தந்துதவுமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் குறித்த இடத்தை உரிய தரப்பினர் துப்பரவு செய்து அப்பகுதியில் இடம்பெற்று வரும் சமூக சீர்கேடுகளை நிறுத்த முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் குறித்த பகுதியில் விச ஜந்துக்களின் நடமாட்டத்தினால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.






புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan