பூஸ்டர் தடுப்பூசி எப்போது ஏற்றப்படும் ? முக்கிய தகவல் வெளியானது
பூஸ்டர் தடுப்பூசி எப்பொது ஏற்றப்பட வேண்டும் என்பது குறித்து சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் அதிகரிப்பதற்காக பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்பட உள்ளது.
இலங்கையில் பயன்படுத்தப்படும் கோவிட் தடுப்பூசிகள் அநேகமானவை இரண்டு மாத்திரைகளை கொண்டமைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இரண்டு மாத்திரை தடுப்பூசிகளையும் ஏற்றுக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்படும்.
அந்த வகையில் இலங்கையில் இரண்டாம் மாத்திரை தடுப்பூசி ஏற்றப்பட்டு ஆறு மாதங்களில் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைக்கு அமைய இவ்வாறு பூஸ்டர் தடுப்பூசி, இரண்டாம் மாத்திரை செலுத்தப்பட்டு ஆறு மாதங்களின் பின்னர் ஏற்றப்பட உள்ளது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 15 மணி நேரம் முன்
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
தாஜ்மகாலுக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண்ணுக்கு பிறந்த கருப்பு நிற குழந்தைகள்! உண்மை என்ன? News Lankasri