பிள்ளையான் - டக்ளஸ் அடுத்தது கருணாவா! அரியநேத்திரன் அம்பலப்படுத்திய உண்மைகள்
இலங்கையின் முன்னாள் ஆயுதக்குழுக்கள் தொடர்பான பழைய குற்றச்சாட்டுகள் மீண்டும் பொதுவெளியில் விவாதமாகி வரும் நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா . அரியநேத்திரன் ஐபிசி தமிழின் அக்கினிப்பார்வை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெளியிட்ட பகிரங்க வாக்குமூலம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“என்னுடைய தம்பி உட்பட பலரை கடத்தி, நீண்ட காலம் சட்டவிரோதமாக வைத்திருந்தார்கள்” எனக் கூறியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகள், கடந்த காலத்தில் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் செயல்பட்ட முன்னாள் ஆயுதக்குழுக்கள் இந்த நாட்டையும் தமிழ்மக்களையும் ஆட்டிப்படைத்த அந்த நிகழ்வுகளை ஞாபகப்படுத்தியதுடன் 1990-களின் இறுதி மற்றும் 2000-களின் ஆரம்ப காலங்களில், கடத்தல், காணாமல் ஆக்கல், சட்டவிரோத தடுப்பு போன்ற குற்றச்சாட்டுகள் பல பதிவாகியிருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை முழுமையான விசாரணை இன்றி நிறுத்தப்பட்டதாகவும் அரியநேத்திரன் பகிரங்கமான குற்றச்சாட்டை விடுத்துள்ளார்.
பிள்ளையான் மற்றும் டக்ளஸ் தேவானந்தா தொடர்பான விவகாரங்கள் மீண்டும் பேசப்படும் சூழலில் வெளியாகியுள்ளதால், இந்த குற்றச்சாட்டுக்கள் “அடுத்ததாக கருணா தொடர்பான குற்றச்சாட்டுகளும் விசாரணைக்கு வருமா?” என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
தொடர்ச்சியாக வலுப்பெற்று வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்- நகர்வின் இறுதி முடிவு தொடர்பில் வெளியான தகவல்