இறக்குமதி தடை: கோதுமை மா விநியோகஸ்தர்கள் மீது புதிய குற்றச்சாட்டு
அனுமதியற்ற கோதுமை மா இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்த தடையைத் தொடர்ந்து உள்ளூர் கோதுமை மா விநியோகஸ்தர்கள், பில்லியன் கணக்கான ரூபாயில் கணிசமான வருமானத்தை ஈட்டியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த விடயம் கோப் குழுவின் அண்மைய கூட்டத்தின் போது வெளிப்படுத்தப்பட்டடுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் இரண்டு நிறுவனங்களும் பெற்றதாகக் கூறப்படும் இலாபங்களின் துல்லியமான அளவைக் கோடிட்டுக் காட்டும் விரிவான அறிக்கையை எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அந்நிய செலாவணி கையிருப்பு
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ, உள்நாட்டு கைத்தொழில்களை பாதுகாக்கவும் அந்நிய செலாவணி கையிருப்பை பாதுகாக்கவும் இறக்குமதி தடையை நிதியமைச்சு அறிமுகப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த இரண்டு நிறுவனங்களும் உயர்ந்த இலாப விகிதத்துடன் இயங்குவதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், கோதுமை மா கிலோ ஒன்றுக்கு 35 ரூபாய் வரியுடன் இறக்குமதி செய்தபோதும், அது கிலோ 160 ரூபாய்க்கு விற்கப்படுவது அவதானிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
