புதிய மேம்படுத்தலை அறிமுகம் செய்யும் வாட்ஸ்அப்
சர்வதேச அளவில் அதிக பயனாளர்களை கொண்ட வாட்ஸ்அப் செயலியில் புதிய மேம்படுத்தல்(Update) ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த மேம்படுத்தல் மூலம், வாட்ஸ்அப் பயன்பாட்டில் குழு அழைப்பைத்(Group call) தொடங்கும்போது, குறிப்பிட்ட பங்கேற்பாளர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியுமான வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இப்போது நீங்கள் விரும்பியவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்படகிறது.
2 பில்லியன்
உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் ஒரு நாளைக்கு வாட்ஸ்அப் வழியாக 2 பில்லியனுக்கும் அதிகமான அழைப்புகளைப் பெறுவதாகக் கூறப்படுகிறது.
வாட்ஸ் அப் அப்ளிகேஷன் தற்போது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகியுள்ளது.
இந்நிலையில், கணினி வழியாக அழைப்புகளைச் சேர்பவர்கள் அழைப்பைத் தொடங்கினாலும், தனியான அழைப்பு இணைப்பை உருவாக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
குழு அழைப்பு மேற்கொள்ளப்பட்டாலும், ஒரு எண்ணை நேரடியாக அழைக்க தேவையான அனைத்து வசதிகளையும் இந்த மேம்படுத்தல் மூலம் பெற முடியும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |