கொழும்பு ஆர்ப்பாட்டத்தில் உயிரிழந்த இளம் தந்தை தொடர்பில் வெளியான தகவல்
பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் நேற்று கையகப்படுத்த முற்பட்ட போது இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.
கண்ணீர் புகைக்குண்டு வீச்சுக்கு மத்தியில் இருந்த போராட்டக்காரர் ஒருவர் புகை ஒவ்வாமை காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
மஹவ, தலதாகம பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான டி.எம்.ஜாலிய திஸாநாயக்க என்ற 26 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். அவர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளவராகும்.

அவர் கண்ணீர்ப்புகைக் காரணமாக ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு பிரதமர் செயலக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் உயிரிழப்பு |
உயிரிழந்தவரின் தந்தை மஹவ உள்ளூராட்சி சபையின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் என தெரியவந்துள்ளது.
நேற்று காலை நண்பர்கள் குழுவுடன் போராட்டத்திற்கு வந்து பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் கலந்துகொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
பராசக்திக்கு வெளிநாட்டில் குவியும் வசூல்.. எவ்வளவு தெரியுமா? அமரன் படத்தை விட அதிகம் தான் Cineulagam
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam