கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி - மூடப்படும் அபாயம்
இறக்குமதி கட்டுப்பாட்டாளரினால் தடைசெய்யப்பட்டுள்ள பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், விமான நிலையத்தில் வரியில்லா வர்த்தகம் முற்றாக பாதிக்கும் எனவும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள தீர்வை வரியற்ற வணிக வளாகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் விமான நிலையத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மொத்தமாக பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இறக்குமதி கட்டுப்பாட்டாளரினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நபர் ஒருவர் தனது பணத்தில் வீட்டிற்கு அவசியமான பொருட்களை தங்கள் வரியில்லா கொடுப்பனவின் கீழ் தீர்வை வரியற்ற கடைகளில் கொள்வனவு செய்வதற்கு இறக்குமதி தடை பாதிக்காதென அவர் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் தகவல் வெளியிட்ட பெயர் குறிப்பிட விரும்பாத முன்னாள் சுங்கப் பணிப்பாளர், இது முற்றிலும் தவறான முடிவு என தெரிவித்துள்ளார்.
இறக்குமதி கட்டுப்பாட்டாளர்கள் சிறிய எண்ணிக்கையிலான பொருட்களை மொத்தமாக நாட்டிற்கு இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளனர்.
இருந்த போதிலும், விமானப் பயணிகளுக்கு இவ்வாறு தடை விதிப்பதன் மூலம், வரியில்லா வணிக வளாகத்தில் வர்த்தகம் முற்றிலும் சீர்குலைந்துவிடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.