வெளிநாடுகளுக்கு தப்பியோடும் அரசியல்வாதிகள் - கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி நடவடிக்கை
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக அரசியல்வாதிகள் தப்பியோடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், அதிதிகளுக்கான நுழைவாயிலில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் சோதனை நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளனர்.
அதிகாரிகள் வெளியேற்றம்
குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள அரசியல் பிரமுகர்கள், நாட்டிலிருந்து வௌியேறுவதற்காக சேதமாவத்த அதிதிகளுக்கான நுழைவாயிலை பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன.
இதன் காரணமாக அந்த பகுதியில் சோதனை நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் K.A.A.S. கணுகல குறிப்பிட்டார்.
திருப்பி அனுப்பப்பட்ட பசில்
இன்று அதிகாலை வெளிநாடு செல்வதற்காக சென்ற முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை நாட்டு விட்டு வெளியேற குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
