எரிவாயு வழங்க முடியாத ஜனாதிபதி பதவி எதற்கு! இப்படி சஜித் அணி கேள்வி..

Fuel Price In Sri Lanka Fuel Price In World National People's Power - NPP NPP Government
By Rakesh Mar 15, 2026 07:22 AM GMT
Report

நாட்டின் தற்போதைய எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடியைத் தீர்ப்பதற்கு அரசிடம் முறையான திட்டங்கள் ஏதுமில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.

அரசு வெறும் பேச்சளவிலேயே காலத்தைக் கடத்தி வருகின்றது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

புதிய எரிபொருள் QR பதிவில் ஏற்பட்டுள்ள சிக்கல்! சற்றுமுன்னர் அரசாங்க தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பு

புதிய எரிபொருள் QR பதிவில் ஏற்பட்டுள்ள சிக்கல்! சற்றுமுன்னர் அரசாங்க தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பு

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலம்

கொழும்பில் நேற்று(14) சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-

"அதிகாரத்தைக் கைப்பற்றும் போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ள அரசு, தற்போது ஒரு கப்பல் எரிபொருளைக் கூட கொள்வனவு செய்ய முடியாத கையாலாகாத நிலையில் உள்ளது.

எரிவாயு வழங்க முடியாத ஜனாதிபதி பதவி எதற்கு! இப்படி சஜித் அணி கேள்வி.. | What Is Point Presidency That Cannot Provide Gas

உலக நாடுகள் வலுசக்தி நெருக்கடியைச் சமாளிக்கப் பல்வேறு திட்டங்களை வகுத்து வரும் நிலையில், இந்த அரசாங்கம் மட்டும் எண்ணெய் இல்லை, நிலக்கரி இல்லை எனக்கூறித் தப்பிக்கப் பார்க்கிறது.

அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் நாட்டை சொர்க்கபுரியாக மாற்றுவோம் என்றும், எரிபொருளைச் சேகரித்து இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோம் என்றும் கூறினார்கள்.

ஆனால், இன்று ஒரு கப்பலுக்குத் தேவையான எரிபொருளைக் கூட இவர்களால் நிரப்ப முடியவில்லை. டொலர் தட்டுப்பாடு என்பது உண்மையாக இருக்கலாம்.

ஆனால், இதே வாதத்தைக் கோட்டாபய ராஜபக்சவின் காலத்திலும் முன்வைத்தார்கள். ரணில் விக்ரமசிங்க அல்லது மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இவ்வாறானதொரு கையாலாகாத நிலையை மக்கள் பார்த்ததில்லை.

இன்று முதல் QR அடிப்படையில் எரிபொருள் விநியோகம்! வாகனங்களுக்கான எரிபொருள் அளவு குறித்து வெளியான தகவல்

இன்று முதல் QR அடிப்படையில் எரிபொருள் விநியோகம்! வாகனங்களுக்கான எரிபொருள் அளவு குறித்து வெளியான தகவல்

எரிபொருள் விலை

தற்போது தனியார் எரிபொருள் நிறுவனங்கள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளன. எரிபொருள் விலை அதிகரிக்கும் என அவர்கள் பதுக்கி வைக்கின்றனர்.

அரசே ஒரு கறுப்புச் சந்தைக்காரனைப் போலச் செயற்படுவதால், இந்த நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாமல் போயுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் பொய்களை மக்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளனர்.

எரிவாயு வழங்க முடியாத ஜனாதிபதி பதவி எதற்கு! இப்படி சஜித் அணி கேள்வி.. | What Is Point Presidency That Cannot Provide Gas

படித்தவர்கள், புத்திஜீவிகள் என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த இவர்களால் எதனையும் செய்ய முடியாது என்பது தெளிவாகியுள்ளது. தற்போது எரிவாயு தட்டுப்பாடு ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

கொழும்பு போன்ற நகர்ப்புற மக்கள் ஒருவேளை உணவைச் சமைக்கக் கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மக்களுக்கு ஒருவேளை உணவைச் சமைக்கத் தேவையான எரிவாயுவை வழங்க முடியாவிட்டால், எதற்காக இந்த ஜனாதிபதி பதவி? நீங்கள் முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டீர்கள்."  என குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US