ஏலியன்கள் உண்மையானவர்களா.. அமெரிக்க அரசின் இரகசியக் கோப்புகளை வெளியிட ட்ரம்ப் உத்தரவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வேற்றுக்கிரகவாசிகள் மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) தொடர்பான இரகசியக் கோப்புகளை வெளியிடுமாறு பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா அண்மையில் ஒரு செவ்வியில் "வேற்றுக்கிரகவாசிகள் உண்மை" என்று கூறியது இரகசியத் தகவல்களை வெளியிடும் செயல் என்றும், அவர் ஒரு "பெரிய தவறு" செய்துவிட்டதாகவும் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
உலக நாடுகளுக்கு அடுத்த அதிர்ச்சி : உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து அதிரடியாக ட்ரம்ப் விதித்த கூடுதல் வரி
வான்வெளியில் தென்படும் மர்மமான நிகழ்வுகள்
பொதுமக்களிடையே இது குறித்து எழுந்துள்ள மிகுந்த ஆர்வத்தின் காரணமாகவே, வேற்றுக்கிரக வாழ்க்கை மற்றும் வான்வெளியில் தென்படும் மர்மமான நிகழ்வுகள் (UAP) தொடர்பான அனைத்துத் தகவல்களையும் அடையாளம் கண்டு பகிரங்கப்படுத்த முடிவு செய்துள்ளதாக அவர் தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த வாரம் வெளியான ஒரு போட்காஸ்ட் நேர்காணலில், ஒபாமா வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதாகத் தான் கருதுவதாகவும், ஆனால் அவர்கள் 'ஏரியா 51' (Area 51) போன்ற இரகசியத் தளங்களில் மறைத்து வைக்கப்படவில்லை என்றும் கூறியிருந்தார்.
பின்னர் தனது கருத்தைத் தெளிவுபடுத்திய ஒபாமா, பிரபஞ்சத்தின் பரப்பளவைக் கணக்கில் கொள்ளும்போது வேற்றுக்கிரகங்களில் உயிர் இருப்பதற்கான புள்ளிவிபர வாய்ப்புகள் அதிகம் என்ற அடிப்படையிலேயே அப்படிக் கூறியதாகவும், தனது ஜனாதிபதி காலத்தில் வேற்று கிரகவாசிகள் தொடர்பு கொண்டதற்கான எந்த ஆதாரத்தையும் தாம் பார்க்கவில்லை என்றும் விளக்கமளித்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாகத் தமக்குத் தனிப்பட்ட கருத்து ஏதுமில்லை எனக் கூறியுள்ள ட்ரம்ப், அரசாங்கத்திடம் உள்ள கோப்புகளை வெளியிடுவதன் மூலம் இது குறித்த மர்மங்களுக்குத் தீர்வு காணப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri