மக்கள் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால் என்ன நடக்கும்? வைத்தியர் வெளியிட்ட தகவல்
நாட்டில் கோவிட் வைரஸ் வேகமாக பரவுவதனை தடுப்பதற்கு அனைத்து மக்களுக்கும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என சுகாதார அமைச்சு மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது.
மக்கள் தொடர்ந்தும் பொறுப்பின்றி செயற்பட்டால் சில வெளிநாடுகளுக்கு ஏற்பட்ட நிலைமை போன்று ஏற்படும் என வைத்தியர் சுதத் சமரவீர எச்சரித்துள்ளார்.
வெளிநாடுகளை போன்று எல்லையின்றி கோவிட் பரவுவதனை தடுக்க மக்கள் உதவ வேண்டும் என நான் கேட்டுக்கொள்கின்றேன். இதனால் தேவையற்ற பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள், முடிந்த அளவு வீட்டிலேயே இருங்கள்.
மக்கள் பொறுப்பின்றி செயற்பட்டால், இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளுக்கு ஏற்பட்ட நிலைமை இலங்கைக்கும் ஏற்பட்டு விடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.