ராஜபக்சவுடன் இணைய நாங்கள் என்ன முட்டாளா? - விமல், கம்மன்பில கூட்டாக பதிலடி
எந்த தேர்தல் வந்தாலும் ராஜபக்சக்களின் குடும்பக் கட்சியுடன் நாம் இணையமாட்டோம். அவ்வளவுக்கு நாம் முட்டாள்களும் அல்ல என முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் கூட்டாகப் பதிலடி வழங்கியுள்ளனர்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில எம்.பி. ஆகியோர் இன்று ஊடகங்களிடம் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில் ,
நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் 'முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் தேர்தலொன்று வரும்போது எங்களைத் தேடி வருவார்கள்' என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து பிரதமருக்கு விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் பதிலளிக்கும் விதமாக, "எந்தத் தேர்தலையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கின்றோம். எந்தத் தேர்தல் வந்தாலும் ராஜபக்சக்களின் குடும்பக் கட்சியுடன் நாம் இணையவே மாட்டோம். அவ்வளவுக்கு நாம் முட்டாள்களும் அல்லர்.
தேர்தல் அறிவிப்பு வந்ததும் எமது அதிரடி ஆட்டங்களை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் பார்ப்பார்கள்.
நாம் பதவிகளுக்காக அலைபவர்கள் அல்லர். பதவி ஆசை எமக்கு இருந்திருந்தால் அரசுக்குள் இருந்துகொண்டே அரசின் மோசமான செயல்களை விமர்சித்திருக்கமாட்டோம்.
நாட்டின் நலன் கருதியும், இந்த ஆட்சிக்கு ஆணை வழங்கிய மக்களின் நம்பிக்கைக்கும் மதிப்பளித்தே உண்மைகளை வெளியில் உரக்கச் சொன்னோம் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தோம். அதனால் எமது அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதி பிடுங்கி எடுத்தார்"என்று தெரிவித்துள்ளனர்.
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri