கொழும்பு வைத்தியசாலையில் தாமதமாகும் சுரேஷ் சலேவின் மருத்துவ அறிக்கை! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமை தொடர்பாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு அழைப்பாணை அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் எதிர்வரும் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சுரேஷ் சலே கைது விவகாரம்
அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே , ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் பெப்ரவரி 25 அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து, தடுப்புக்காவல் உத்தரவுகளின் பேரில் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தாம் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்குள் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதயவியல் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப்பெற்று வருகின்றார்.
இந்நிலையில், அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் தற்போதைய உடல்நிலை தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான், கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
you may like this video