இலங்கை மக்கள் உணவுப் பாதுகாப்பின்றி இருப்பதாக உலக உணவு திட்டம் எச்சரிக்கை
இலங்கையில் எஞ்சியுள்ள பெட்ரோல் இருப்பு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்காது என உலக உணவு திட்டம் (WFP)தெரிவித்துள்ளது.
கடுமையான விநியோக பற்றாக்குறையை எதிர்கொள்வதால் அடுத்த 12 மாதங்களுக்கு எரிபொருள் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
உணவு வழங்கும் திட்டம்

இலங்கையில் 6.3 மில்லியன் மக்கள் உணவு பாதுகாப்பின்றி இருப்பதாகவும் நெருக்கடி நிலை மோசமடையக்கூடும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
மேலும் 6.7 மில்லியன் மக்கள் போசனை உணவுகளை உட்கொள்வதில்லை இதனையடுத்து 3.4 மில்லியன் மக்களுக்கு அவசர உணவு ஊட்டச்சத்துக்களை வழங்க உலக உணவு திட்டம் திட்டமிட்டுள்ளது.
பொருட்கள் கொள்வனவு

ஜூன் மாதத்தில் உலக உணவு திட்டத்தின் சந்தை கண்காணிப்பு நேர்காணல்களின் படி உணவு பொருட்கள் மற்றும் நுகர்வு பொருட்களின் விலை சுமையாக இருப்பதால் மக்கள் சிறிய அளவில் பொருட்களை கொள்வனவு செய்கின்றனர்.
இலங்கையின் உணவு இறக்குமதிகள் 130 மில்லியன் டொலர்களில் இருந்து தற்போது 50 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளன.
காய்கறிகள் போன்ற சத்தான உணவுகள் நெருக்கடிக்கு முந்தைய விலையை விட இரண்டு
முதல் ஐந்து மடங்கு வரை அதிகரித்துள்ளன என தெரிவித்துள்ளது.
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri