ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் ஆண்டுக்கான சொல்லாக வெக்ஸ் தெரிவு
ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் இந்த ஆண்டுக்கான சொல்லாக வெக்ஸ் (Vax) தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் கோவிட் பெருந்தொற்று நிலைமைகளின் காரணமாக தடுப்பூசிகள் தொடர்பான சொற் பிரயோகங்கள் வெகுவாக அதிகரித்துள்ளது.
இரட்டை தடுப்பூசி ஏற்றப்பட்டவர் ( double-vaxxed), தடுப்பூசி ஏற்றப்படாதவர் (unvaxxed) மற்றும் தடுப்பூசிக்கு எதிரானவர் (anti-vaxxer) ஆகிய வார்த்தைகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதிகளவில் பயன்படுத்தப்பட்டமையினால் இந்த வார்த்தையை ஆண்டின் வார்த்தையாக தெரிவு செய்துள்ளதாக ஒக்ஸ்போர்ட் அகராதியின் சிரேஸ்ட ஆசிரியர் பியோனா பெக்பெர்சன் (Fiona McPherson ) தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டாலும் அண்மையில் இந்த வார்த்தையின் பிரயோகம் அதிகரித்துள்ளது.
பெருந்தொற்று என்ற வார்த்தையும் இந்த ஆண்டில் 57000வீதம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
1799ம் ஆண்டில் வெக்ஸ் என்னும் வார்த்தை முதன் முதலில் ஆங்கிலத்தில் பதிவானது. இந்த அனைத்து வார்த்தைகளும் லத்தின் மொழியின் வெக்கா (vacca) என்ற வார்த்தையிலிருந்து மருவியவை என்பது குறிப்பிடத்தக்கது.
வெக்கா என்ற சொல்லுக்கு லத்தின் மொழியில் மாடு என்று அர்த்தம் எனவும், அம்மை நோய் தொடர்பான ஆய்வுகளின் பின்னர் இந்த பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் lexicographer எனப்படும் அகதி ஆசிரியர்களினால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு ஆண்டுக்கான வார்த்தை தெரிவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.